​18 ஆண்டுகளாக வயிற்றிற்குள் இருக்கும் கத்தரிக்கோல்..!

Author: No Comments Share:

scissors

வியட்னாம்: 18 ஆண்டுகளுக்கு முன் ஒருவரின் உடலுக்குள் வைக்கப்பட்ட கத்தரிக்கோலை வியட்னாம் மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர். வியட்னாம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தாய் குயன் மாகாணத்தில் 54 வயதான மா வான் நாட் என்பவர் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் அவருடைய உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றுக்குள் 15 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். இதையடுத்து மா வான் நாட்டிடம் விசாரித்த மருத்துவர்கள், அவருக்கு அதே மருத்துவமனையில் 1998ம் ஆண்டு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டதைக் கண்டுபிடித்தனர்.

அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் தவறுதலாக அவரது வயிற்றுக்குள் 15 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோலை வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. மருத்துவமனையின் தற்போதைய நிலையில், 15 ஆண்டுகளுக்கான ஆவணங்களே இருப்பதால், 18 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சையை யார் செய்தது எனக்கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மா வான் நாட்டின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோல் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

Previous Article

திரிணாமுல் எம்.பி. கைது சிபிஐ ஆபீசில் முற்றுகை

Next Article

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி!

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *