வாரிசுகளுக்கு நோ சீட்: மோடி கறார்

Author: No Comments Share:
Second day of BJP's national executive meetingபுதுடெல்லி:  ஐந்து மாநில தேர்தலில் பாஜ வெற்றிபெற வேண்டும்என்பதே நமது இலக்கு.எனவே தலைவர்கள், முன்னணியினர் தங்களின் வாரிசுகளுக்கு, உறவினர்களுக்கு சீட் கேட்டு கட்சியை நிர்ப்பந்திக்கக்கூடாது என்று  செயற்குழுவில் பிரதமர்  மோடி கண்டிப்புடன்  கூறினார்.
பாஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 2 நாள் நடந்தது. நேற்று பிரதமர் மோடி நிறைவுரை ஆற்றினார்.டில்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது ரூபாய் மதிப்பு நீக்கம் பற்றி மோடி குறிப்பிட்டார். ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதே எனது அரசின்லட்சியம் ஆகும். அதை நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.   ரூ.500,1000 நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட  தடை என்பது ஊழல் மற்றும் கறுப்புப்பணத்துக்கு எதிரான நீண்ட கால நடவடிக்கைகளின் ஒரு பகுதியே ஆகும்.  இது ஒரு புனிதமான இயக்கம். ஊழல் என்பது  ஒரு பெரிய சமுதாய தீமை ஆகும். கட்டுப்பாடில்லாத  கரன்சி புழக்கமும் ஒரு பெரிய தடையாக இருந்தது. இதில் ஊழலும் அடங்கும்.  என்று  சுட்டிக்காட்டினார்.
ரூபாய் தடையினால்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் தான் என்பதால் அரசின் மீது  மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். இது பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர், நமது தொண்டர்கள்  கட்சி  அமைப்பு பலம் மூலம்  ஏழைகள் மனதை மாற்றி அவர்கள் உள்ளத்தில் இடம் பெற வேண்டும். மக்கள் தொண்டே…மகேசன் தொண்டுஆகும்.ஏழைகளுக்கு உதவுவதே உண்மையில் கடவுளுக்கான சேவை ஆகும். ஏழ்மையும் வறுமையும் இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதல்ல.  இது மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த ஒரு வாய்ப்பு என்று அறிவுறுத்தினார்.  
ரூபாய் தடை காரணமாகத்தான் வங்கிகளில் டெபாசிட் குவிந்துள்ளது. அதனால் தான் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. அதுமட்டுமல்ல மாநிலங்களில் அதிகளவு வருவாய் குவிந்துள்ளது. மத்தியஅரசுக்கும் வருவாய் அதிகரித்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி எடுத்துக்கூறினார்.
வாரிசுகளுக்கு சீட் கேட்காதீர்
ஐந்து மாநில தேர்தல் பற்றி பேசிய மோடி,  இந்த தேர்தலில் பாஜனதா வெற்றி பெறுவது தான் முக்கியம். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும். வெற்றி வாய்ப்பு உள்ள தகுதியான நபர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். 
கட்சியின் முன்னணி  தலைவர்கள், முன்னணியினர் தங்களின் மனைவி,  மகன்,மகள், அண்ணன், த ம்பி அல்லது உறவினர்களுக்கு   சீட் கேட்பது எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பாரபட்சம் காட்டப்படுவதாக, ஒருசாராருக்கே கட்சி ஆதரவு அளிப்பதாக தொண்டர்களிடம் எண்ணம் தலை தூக்கி விடும்.  தொண்டர்கள் தான் கட்சியின் முதுகெலும்பு. தொண்டர்களின் கடின உழைப்பில் தலைவர்களின் தங்களின் வாரிசுகளை திணிப்பது சரியல்ல. எனவே தேர்தலில் சீட் கேட்டு கட்சித் தலைமைக்கு நிர்ப்பந்தம் தராதீர். அனைத்து தரப்பினருக்கும் சம நீதி அளிக்கப்படும் என்றும் மோடி உறுதி அளித்தார்.
 அதே போல கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, கட்சிக்கு வரும் நிதிகள் குறித்த விவரங்களில் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.பாஜனதாவுக்கு நிதி எப்படி வருகிறது என்று மக்களுக்கே தெரியும் என்றும்கேட்டுக்கொண்டார்.
உபி சட்டசபைத் தேர்தலில் தங்களை வாரிசுகளை களம் இறக்க பல தலைவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்காக கட்சித்தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இதற்குமுடிவு கட்டவே பிரதமர் மோடி இந்த எச்சரிக்கையை பகிரங்கமாக விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் உபியில் பாஜனதா  அதிக இடம் பிடித்ததற்கு அமித்ஷாவின் வேட்பாளர் தேர்வும் ஒரு காரணம். அதனால் உபி சட்டசபைத் தேர்தலி லும் வேட்பாளர் தேர்வை எந்த தலையீடும் இன்றி அமித்ஷா பார்த்துக் கொள்ளவேண்டும்என்பதற்காகவே இந்த எச்சரிக்கையை மோடி விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
Previous Article

பிப்ரவரி 1ல் பட்ஜெட்! மத்தியஅரசு திட்டவட்டம்

Next Article

திருநாவுக்கரசர்–இளங்கோவன் மோதல்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *