பெட்ரோல், டீசலுக்கு டெபிட்,கிரெடிட் கார்டு ஏற்பு

Author: No Comments Share:

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் நிரப்பினால் கார்டு மூலம் பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகள் நிறுத்தி வைக்க முடிவு செய்ததால்,நள்ளிரவு முதல் மீண்டும் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ளலாம் என்று பெட்ரோலியம் டீலர்கள் அறிவித்துள்ளனர்.

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ வேலட் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனையில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தள்ளுபடிகளும், பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண் டால் விலையில் 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. பெட்ரோல் அல்லது டீசல் வாங்கிய 3 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் தள்ளுபடி தொகை செலுத்தப்படும் என்றும்எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், ரிசர்வ் வங்கியின் 2016 டிசம்பர் 16ம் தேதி உத்தரவுப்படி, பெட்ரோல் பங்க்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு கார்டு பரிவர்த்தனைக்கும் பெட்ரோலியம் டீலர்களிடம் ஒரு சதவீதம் வரை ‘எம்டிஆர்’ (மெர்ச்சன்ட்ஸ் டிஸ்கவுன்ட் ரேட்) கழித்துக் கொள்ளப்படும் என்று வங்கிகள் நேற்று முன்தினம் அறிவித்தன. டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரையும், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதமும் எம்டிஆர் கழிக்கப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.

இதற்கு பெட்ரோலியம் டீலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 2.60ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 1.65ம் டீலர் கமிஷனாக வழங்கப்படுகிறது. எனவே, 2 சதவீதத்துக்கும் குறைவான நடைமுறை லாபத்துடன் பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன. இப்போது, ஒவ்வொரு கார்டு பரிவர்த்தனைக்கும் பெட்ரோலியம் டீலர்களிடம் ஒரு சதவீதம் எம்டிஆர் கழித்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பால், பெட்ரோலியம் டீலர்களுக்கு லாபம் மேலும் குறையும். எனவே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் டீசல் விற்பனைக்கு டெபிட், கிரெடிட் கார்டுகள் திங்கட்கிழமை முதல் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவித்தனர். ஆனால் நேற்றே பல இடங்களில் இதை அமல்படுத்தத் தொடங்கி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு சில்லரை கேட்டனர்.2000ரூபாய் நோட்டை நீட்டினால் சில்லரை இல்லை என்றனர். சில்லரை யும் இன்றி, கார்டும் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பல இடங்களில் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வாடிக்கை யாளர்கள் மீது மேலும் சுமை ஏற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து நேற்றுஇரவில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஒரு சதவீத பரிவர்த்தனை கட்டணம்வசூலிப்பதை ஜனவரி 13ம்தேதி வரை நிறுத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. டீலர்களுக்குஏற்படும் இழப்பை எப்படி சரிக்கட்டுவது என்பது பற்றி, 13ம்தேதிக்குள்முடிவு எடுக்கப்படும் என்றுஎண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பின்னர்பெட்ரோலிய டீலர்களும் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனையை மீண்டும் தொடர முடிவு செய்தனர். நள்ளிரவு இந்த முடிவு எடுக்கப்பட்டது.எனவே இன்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ளலாம்.

Previous Article

நானே இன்னமும் ராஜா! சமாஜ்வாடி என் கட்சியே!!

Next Article

உதய் மின் திட்டத்தில் தமிழகமும் இணைந்தது

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *