பிப்ரவரி 1ல் பட்ஜெட்! மத்தியஅரசு திட்டவட்டம்

Author: No Comments Share:
2புதுடெல்லி:     ஐந்து மாநில தேர்தல்கள் நடக்க இருப்பதால் அதற்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கோரியும், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டும் மத்தியஅரசு  நிராகரித்து விட்டது.  திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய பாஜ அரசு முன் வந்துள்ளது.அதற்கு ஏற்றாற் போல நாடாளுமன்ற கூட்டத்தை 31ம் தேதி கூட்டுவதாக ஜனாதிபதி அறிவிக்கை நேற்று முறைப்படி வெளியானது.
நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரை இந்த ஆண்டு முன்கூட்டியே கூட்டி, பட்ஜெட்டையும் முன்கூட்டியே தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்தது.  இதன்படி ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்றம் கூடுவது என்றும் முதல்நாளில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார் என்றும் மறுநாள்  பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வது என்றும் மத்தியஅமைச்சரவை குழு பரிந்துரைசெய்து ஜனாதிபதிக்கு அனுப்பியது. 
இதற்கிடையே, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடக்கும் என தேர்தல் கமிஷன் கடந்த 4ம் தேதி அறிவித்தது. பட்ஜெட் தாக்கலான 3 நாட்களில் தேர்தல் ஆரம்பமாகிறது. இதனால், இந்த மாநில மக்களை கவரும் விதமாக பட்ஜெட்டில் ஏராளமான சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது. இது தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறுவது ஆகும்.  எனவே, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் எழுதி உள்ளன. மேலும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 11 பேர் அடங்கிய குழு கடந்த 5ம் தேதி சந்தித்து பேசி, இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது.   
இந்நிலையில், பட்ஜெட் தேதியை மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ªல்லி வக்கீல் எம்எல் சர்மா  பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.  
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பதில் தருமாறு மத்திய அரசை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்காவுக்கு  தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கடிதம் எழுதிஉள்ளார். மார்ச் 8ம் தேதி வரை பட்ஜெட் தாக்கலை தள்ளி வைக்கக் கோரி காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனுப்பிய மனுக்களையும் இணைத்து, ஜனவரி 10ம்தேதிக்குள் பதில் அனுப்பும் படி கோரி இருக்கிறார்.  இது குறித்து  தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர்  கூறுகையில், ‘பட்ஜெட் தாக்கல் என்பது நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட சட்ட நடைமுறை. எனவே, பட்ஜெட்டை தள்ளி வைக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட முடியாது. எனினும், வேண்டுகோள் விடுக்க முடியும். இது தொடர்பாக பதில் தருமாறு மத்திய அரசை நாங்கள் அணுகி இருக்கிறோம்.  ஜனவரி 10ம் தேதிக்குள் பதில் தரும்படி கேபினட் செயலாளரை  கேட்டிருக்கிறோம். அதன்பிறகு தேர்தல் கமிஷன் தன்னுடைய முடிவை இன்னும் ஒரு வாரத்துக்குள் அறிவிக்கும். மேலும் அரசின் முடிவை எதிர்த்து எங்களிடம்மனுதரும்போது அதை அரசுக்கே அனுப்பி வைப்போம்.அப்படித்தான் எதிர்க்கட்சிகள் தந்த மனுவையும் அனுப்பிவைத்தோம் “ என்றார்.
ஆனால் திர்க்கட்சிகளின்கோரிக்கையையோ தேர்தல் கமிஷனின் வேண்டுகோளையே ஏற்பதில்லை என்பதில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது. திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதில் எந்த மாற்றமும் இல்லை என்றே அரசு வட்டாரங்கள்கூறின. முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது இப்போது திடீரென எடுத்த முடிவல்ல.கடந்த செப்டம்பர் மாதமே இது பற்றி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதற்கேற்றாற்போல நவம்பரில் அமைச்சரவை ஒப்புதல் பெற்றுசுற்றறிக்கையும் வெளியானது.  எனவே இது பற்றி தேர்தல் கமிஷனுக்கு விளக்கமான பதில் அனுப்பப்படும் என்று மத்திய அரசுஅதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மாளிகை நேற்று ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் ஜனவரி 31ம் தேதி மாநிலங்களவையை ஜனாதிபதி கூட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல மக்களவை கூடுவது பற்றிய அறிவிப்பை அதன் செயலகம் தனியாக வெளியிடுகிறது.
ஜனவரி 31ம் தேதி காலையில் இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரைநிகழ்த்துகிறார். மதியம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் ஆகிறது. மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. வேண்டுமானால் பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு எந்தவித திட்டமோ, சலுகையோ இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளலாம். தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டால் தான் நடத்தை நெறி முறை மீறல் ஆகும். அப்படி மீறாமல் பார்த்துக்கொள்வோம்  என்று  அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 
Previous Article

சசிகலா அழைத்ததால் வந்தேன்; கார் தந்தார்: நாஞ்சில் சம்பத்

Next Article

வாரிசுகளுக்கு நோ சீட்: மோடி கறார்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *