நானே இன்னமும் ராஜா! சமாஜ்வாடி என் கட்சியே!!

Author: No Comments Share:

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி என் கட்சி. நானே அதன் ராஜா என்று முலாயம்சிங் யாதவ் கூறினார். உபியில் ஆளும்சமாஜ்வாடி கட்சியில் தந்தை முலாயம்சிங் யாதவை எதிர்த்து மகன் அகிலேஷ் யாதவ் போர்க்கொடி தூக்கியதால், தந்தையையே பதவியை விட்டு எறிந்துவிட்டு நானே தேசிய தலைவர் என்று அறிவித்தார்.கட்சியில் மெஜாரிட்டி என் பக்கமே என்று தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்டி நிரூபித்தார். தேர்தல் ஆணையத்திடமும் 220 எம்எல்ஏக்கள் 50 எம்எல்சிக்கள், 20க்கும் மேற்பட்ட எம்பிக்கள் என்பக்கமே இருக்கிறார்கள் என்று பட்டியலை ஒப்படைத்தார். தனித்தே நிற்கப் போவதாகவும் சைக்கிள் சின்னம் எனக்கே சொந்தம் என்றும்கூறி விட்டார். சிவபால்யாதவ் கடைசி கட்ட சமரசத்தில் ஈடுபட்டும் பலன் அளிக்கவில்லை.

இந்தநிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முலாயம்சிங் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இன்னமும்நான் தான் இருக்கிறேன். கட்சியை உருவாக்கி பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கியதே நான்தான்.எனவே தேசிய செயற்குழு கூட்டத்தை வேறுயார் கூட்டினாலும் சட்டப்படி அது செல்லாது. மாநிலத் தலைவர் சிவபால்யாதவ் தான். சைக்கிள் சின்னம் எங்களுக்கே சொந்தம். இது பற்றி தேர்தல் கமிஷன் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்வோம் என்றார்.

இந்த பேட்டியில் உடன் இருந்த அமர்சிங், என்னால் சமாஜ்வாடி உடையக்கூடாது.நான் வேண்டுமானால் வெளியேறுகிறேன்.கட்சி உடைபடா மல் தேர்தலை சந்தித்துவெற்றி பெற வேண்டும் என்பதேஎன் ஆசை என்றார். இதற்கிடையில் அகிலேஷ் யாதவ் தரப்பில் இன்று தேர்தல் கமிஷனிடம்ஒரு பண்டல் ஆவணங் கள் தாக்கல் செய்யப்படுகிறது. எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்,எம்எல்சிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 5000பேர் தாக்கல் செய்த அபிடவிட் டுகளுடன்இன்றுதேர்தல் ஆணையத்தை சந்திக்கிறார்கள். இது பற்றி ஜனவரி 17ம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது. ஒரு வேளை சைக்கிள் சின்னம்முடக்கப்பட்டால், புதிய சின்னத்தின் கீழ் தான் இரு பிரிவினரும்போட்டியிட வேண்டும்.பின்னர் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுகஷ்டமானதுஎன்றே கருதப்படு கிறது.

Previous Article

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்

Next Article

பெட்ரோல், டீசலுக்கு டெபிட்,கிரெடிட் கார்டு ஏற்பு

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *