த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய ரம்யா நம்பீசன்

Author: No Comments Share:

சென்னை: கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா, இப்போதும் பிசியான நடிகையாக கோலிவுட்டில் வலம் வருகிறார். இவர் நடித்த ‘மோகினி’ திரைப்படம் இம்மாதம் வெளிவரவுள்ள நிலையில் தற்போது இவர் அரவிந்தசாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அஸ்வின் வினாயகமூர்த்தி இசையில் உருவான இந்த பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். ஏற்கனவே ரம்யா நம்பீசன் பல தமிழ், மற்றும் மலையாள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருந்தாலும் த்ரிஷாவுக்காக பாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.

Previous Article

ஒருநாள் அணியில் மீண்டும் யுவராஜ் சிங்

Next Article

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகரிப்பு

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *