திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோற்சவம்

Author: No Comments Share:

02tpy-031216-9aதிருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
அதன்படி, 8வது நாளான நேற்று காலை திருத்தேர் உற்சவம் கோயில் மாட வீதிகளில் நடந்தது. இதை முன்னிட்டு, சர்வ அலங்கார திருக்கோலத்தில் கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் பத்மாவதி தாயார், திருத்தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
அப்போது, திடீரென கன மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்த உற்சவம், கோயில் தெப்பக்குளத்தில் இன்று நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, புனிதநீராட ஏறத்தாழ 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Article

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா தொடங்கியது!

Next Article

வங்கதேசத்தில் இந்துக்கள் வீடுகளுக்கு தீ

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *