டென்னிசிலிருந்து ஓய்வா: பயஸ் மறுப்பு

Author: No Comments Share:

mahesh-bhupathi_071712061156சென்னை: இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்தியை மறுத்தார். இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 43. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஆண்கள் இரட்டையர் (8), கலப்பு இரட்டையரில் (10) மொத்தம் 18 பட்டம் வென்றுள்ளார். தற்போதைய சென்னை ஓபன் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் பிரேசிலின் ஆன்ட்ரியுடன் விளையாடி வீழ்ந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவர் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து பயஸ் கூறியதாவது: சக வீரர் சோம்தேவ் ஓய்வு பெற்றதால், அவரது முடிவு குறித்து சில நாட்களுக்குப் பின் என்னிடம் கேட்டனர். இதுகுறித்து நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன. இதனால், ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகின. என்னைப் பொறுத்தவரையில் டென்னிஸ் விளையாடுவது குறித்த ஆர்வம் இன்னும் குறையவில்லை. சென்னை ஓபன் தொடரிலும் பங்கேற்பேன். ஆன்ட்ரியுடன் இணைந்து விரைவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வேன். இவ்வாறு பயஸ் கூறினார்.

Previous Article

யார் பக்கம் யார்? மாறும் தமிழக அரசியல்…

Next Article

டி20-யாக மாறிய சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா அதிரடி

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *