டி20-யாக மாறிய சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா அதிரடி

Author: No Comments Share:

SYDNEY, AUSTRALIA - JANUARY 06:  David Warner of Australia bats during day four of the Third Test match between Australia and Pakistan at Sydney Cricket Ground on January 6, 2017 in Sydney, Australia.  (Photo by Mark Kolbe/Getty Images)

சிட்னி: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 538 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 315 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் பின்தங்கியதால் பாகிஸ்தான் அணி பாலோ-ஆன் ஆனது. ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கம் முதலே வார்னர் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 55 ரன்களும், ஸ்மித் 43 பந்தில் 59 ரன்களும் குவிக்க சிட்னி டி20-யாக மாறியது. கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் அவுட்டாகாமல் முறையே 79 மற்றும் 40 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 32 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் 223 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 464 ரன்கள் பாகிஸ்தானுடன் அதிகம் பெற்றது. இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்தது. பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.

Previous Article

டென்னிசிலிருந்து ஓய்வா: பயஸ் மறுப்பு

Next Article

ஒருநாள் அணியில் மீண்டும் யுவராஜ் சிங்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *