ஜல்லிக்கட்டுக்கு இடையூறான சட்ட விதிகளை நீக்க வேண்டும்

Author: No Comments Share:

சென்னை : தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது உள்ள தடையை நீக்க வலியுறுத்தி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில், ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முயற்சிகள் எடுக்கும் என்று உறுதி அளித்து உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடையூறாக உள்ள சட்ட விதிகளை நீக்கி நடவடிக்கை எடுப்பதுடன், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கம் ஜல்லிக்கட்டு என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்றும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே நாட்கள் உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Article

ஜெயலலிதா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் சசிகலா

Next Article

எம்ஜிஆர் பிறந்தநாளில் தீபா அரசியல் பிரவேசம்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *