கழுதைப் பாலுக்கு கடும் கிராக்கி

Author: No Comments Share:

donkeys-milkபெங்களூரு நகரில் கழுதைப் பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. 50மில்லி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கழுதைப் பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆஸ்துமா, இருமல், சளி தொந்தரவு இருக்காது. 4வயதுக்குட்பட்ட குழந்தை கள் நன்கு சாப்பிட ஆரம்பிக்கும் என்பதே பெங்களூரு மக்கள் சொல்கிற காரணங்கள் ஆகும். பெங்களூரு வசந்த்நகர், கண்டோன்மென்ட், மடிவாலா, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், ஸ்ரீராம்புரா, காவி புரா பகுதிகளில் உள்ள சலவைத் தொழிலா ளர்களுக்கான குடியிருப்புகளில் காலையிலேயே கழுதைப்பால் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 200மில்லி அளவுக்கு வாங்கிச் சென்று பிரிட்ஜில் வைத்திருந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். கழுதைப் பாலை அப்படியே குடிக்க வேண்டும். தினமும்2 ஸ்பூன் வீதம் குழந்தைக்கு கொடுப்பதாக பலரும் கூறினர். ஆனால் டாக்டர்கள் கூறுகையில், கழுதைப்பாலில் மருத்துவ குணங்கள் இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பாலில் புரொட்டீன் சத்து அதிகம் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள்.

Previous Article

டிசம்பர் முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்பு: எஸ்.ஆர்.ரமணன்

Next Article

விவாகரத்துக்கு முன்பு கள்ளத் தொடர்பு துணையை கொடுமை செய்வதே…

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *