எந்த சூழ்ச்சிக்கும் ஆளாகாதீர்: அதிமுகவினருக்கு சசிகலா கட்டளை

Author: No Comments Share:

07சென்னை: எந்த சூழ்ச்சிக்கும் அதிமுகவினர் ஆளாகி விடக்கூடாது என்று சசிகலா கேட்டுக்கொண்டார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், புறநகர் ஆகிய கட்சி நிர்வாகிகளுடன் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பாதுகாப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு உறுதுணையாக இருந்தாரோ அதே நிலை தற்போதும் தொடர வேண்டும். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டறிந்து தலைமைக்கு எடுத்துரைக்க வேண்டும். அதனை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக ராணுவ கட்டுக்கோப்பான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். எனவே எந்த சூழ்ச்சிக்கும் ஆளாகாமல் கட்சி பணியாற்ற வேண்டும். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்பதில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிரதமரிடமும், மத்திய அரசிடமும் எடுத்துரைத்து இருக்கிறோம். அதில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றி பெற தொண்டர்களும், நிர்வாகிகளும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு சசிகலா பேசினார்.

Previous Article

எம்ஜிஆர் பிறந்தநாளில் தீபா அரசியல் பிரவேசம்

Next Article

சசிகலா அழைத்ததால் வந்தேன்; கார் தந்தார்: நாஞ்சில் சம்பத்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *