உயர்ரத்த அழுத்தம் தடுப்பது எப்படி…..

Author: No Comments Share:

walkஉங்களுக்கு பிபி இருக்கா? பி.பி என்றால் என்ன? ஏன் வருகிறது.
இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப் செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயத் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச அளவு இருந்தால் அவர் நார்மல்.
120/80 என்ற நிலையைத் தாண்டி 139/89 வரை கூட போகலாம்
அதை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய நிலை என்பர். இந்த எல்லையையும் தாண்டி, அதாவது 140/90 தாண்டி விட்டால் அதுதான் உயர் ரத்த அழுத்தம்.
இதனை உடனே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால், ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெயிலியர், சர்க்கரை நோய், கண், மூளை பாதிப்பு என்று சகல நோய்க்கும் வழிவகுத்து விடும்.
பி.பி.யைக் கட்டுப்படுத்தும் வழிகள்
உப்பு தான் பி.பி.யின முதல் எதிரி. உப்பு அதிகம் உள்ள எந்தப் பொருளையும் தொடக்கூடாது.
இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். அளவுக்கு அதிகமான எடையை, சதையை இடுப்பில் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுருக்கமாக தொப்பை போடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தொப்பை மட்டுமல்ல, உடல் எடை கூடினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பி.பி. உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் அளவுக்கு மீறி உடல்எடை உள்ளவர்கள். அதனால் உடல் எடையில் கவனம் வேண்டும். கவலை, பதற்றம், பயம், மன அழுத்தம், மன இறுக்ம் இருந்தால் கண்டிப்பாக பி.பி. எகிறும். யோகா, தியானம், மூச்சு உள்வாங்கி வெளியிடுதல் போன்ற பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும். புகை பிடிப்பது பி.பி.யின் இன்னொரு பெரிய எதிரி. ஒரு சிகரெட் புகைத்தாலே 10 மி.மீ. வரை ரத்த அழுத்தம் உயரும்.
மதுவால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறைகிறது என்கிறார்கள். ஆனால் அதுவே அளவை மீறினால் உயிருக்கே ஆபத்துதான். அதிகாலை நடைப்பயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது உடற்பயிற்சி செய்துவர வேண்டும். யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் சுமார் 10 மி.மி. அளவு உயர் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடித்துள்ளனர். நடைப்பயிற்சி மூச்சு இறைக்க இறைக்க நடக்கக்கூடாது. நடக்கும்பாது நடையில் மட்டும்தான் கவனம் வைக்க வேண்டும். நடக்கும்பொழுது பாதம் முழுவதும் ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை வெயிலுக்கு முன்பு நடப்பது நல்லது.

Previous Article

கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் பக்கவாதம் வரும்

Next Article

மகாலட்சுமி அருள் பெறுவோம்…

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *