இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Author: No Comments Share:

23டோலோடன்கா:  இந்தோனேசியாவின் சம்பாவா பகுதியில் நேற்று காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

டோலோடன்கா நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் 72 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேர் இறந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 புள்ளி பதிவானது குறிப்பிடத்தக்கது.

Previous Article

பேக்கரி கடையில் தீ: 6 பேர் பலி

Next Article

சேகர் ரெட்டி ஜாமீன் மனு டிஸ்மிஸ்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *