அலுவல் நேரம் மட்டுமே பணியாற்றினால் போதும்: புதிய சட்டம் அமல்

Author: No Comments Share:

huge-bk-office-6

பாரீஸ்: அலுவலக நேரம் மற்றும் பணியாற்றினால் போதும். மற்ற நேரங்களில் அலுவலகம் தொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டாம் என புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  பிரான்சில் எந்தநேரத்தில் மின்னஞ்சல் அனுப்பினாலும் அதற்குபதில் அளிக்கவேண்டும் என்று நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் அதற்கேற்ப தகுந்த ஊதியம் அளிப்பதில்லை என்ற குறைபாடு ஊழியர்களிடம் உள்ளது. இதனால் மன அழுத்தம், அதிக சோர்வு, தூக்கமின்மை மற்றும் உறவுகளில் சிக்கல்கள் என பல ஆபத்துக்களை அவர்கள் சந்திக்கின்றனர். எனவே அலுவலகங்களில் பணிபுரிவோ ருக்காக பிரான்சு நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி 50 பணியாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில், பணியாளர்களின் நன்னடத்தைகளை பதிவு செய்திட வேண்டும்; மேலும் பணியாளர்கள் எந்த நேரத்தில் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் பணியாளர்கள் வீட்டிலும் அலுவலக பணிகளை ஆற்றுவதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.

Previous Article

சமாஜ்வாடியை கைப்பற்றியது கடினமான முடிவு என்றாலும் சரியே!

Next Article

கறுப்புப்பணம் பெருமளவில் வங்கிக்கு வந்து விட்டது, வட்டி விகிதம் குறையும்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *